தவறுதலாக பிரதமர் மோடியை ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்றழைத்த ராகுல்...
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தவறுதலாக பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எனக் குறிப்பிட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலை ஒட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கடந்த காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், ‘கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்ல. நாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று அவர்களால் பட்டியல் இட முடியுமா?" என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மகாத் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அப்போது அவர் மோடியின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். ஆனால், தவறுதலாக மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எனக் குறிப்பிட்டு விட்டார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, "கடந்த 60 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாட்டின் நிலைமையை அவர் ஒருவரே தூக்கி நிறுத்தப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தேசத்துக்காக உழைத்த அம்பேத்கர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு ஆகியோரின் தியாகங்களை என்ன செய்வது? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களாகிய நீங்களும் உங்களது முன்னோர்களும் தான் காரணம்.
உங்களது வியர்வையும், ரத்தமும் தான் இந்த நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம்" என தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications