மீண்டும் விளவங்கோடு வாய்ப்பு... விஜயதரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் உண்ணாவிரதம்
டெல்லி: விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளராக விஜயதரணி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தொகுதி காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலும் நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களது வேட்பாளரை மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட தொகுதி கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து பல தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது காங்கிரசிலும் வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதிக்கு விஜயதரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சட்டசபைத் தேர்தலில் அதே தொகுதியில் தான் அவர் போட்டியிட்டு வென்று, எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொகுதி பக்கமே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விஜயதரணியை மாற்றக்கோரி அத்தொகுதி காங்கிரசார் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் அவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார் விஜயதாரணி. இந்நிலையில், தற்போது விளவங்கோடு காங்கிரசாரின் உண்ணாவிரதப் போராட்டத்தால் விஜயதாரணியின் வேட்பாளர் வாய்ப்பு சிக்கலில் சிக்கியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications