ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி: லோக்சபாவில் கிளம்பிய விவகாரம்
டெல்லி: புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி இப்தார் விருந்து வழங்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் நேற்று பிரச்சினை எழுப்பினார்.
இதேபோல ரம்ஜான் வாழ்த்தும் பிரதமர் தெரிவிக்கவில்லை என்று லோக்சபாவில் எதிர்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர்.
முஸ்லீம் மக்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் பாகுபாடின்றி இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இப்தார் விருந்து அளித்தனர். ஆனால் பிரதமர் இப்தார் விருந்து அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேசுகையில், "பிரதமர் மோடி பசுபதிநாதர் கோவில் முதல் திருப்பதி வரை செல்லும்போது ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பிரதமர்கள் ரம்ஜான் மாதத்தில் இப்தார் விருந்து அளிப்பது நடைமுறையில் உள்ளது. பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட இந்த மரபைத் தொடர்ந்தார். ஆனால் இப்போது என்ன நடந்தது?" என்று மோடி இப்தார் விருந்து வழங்காததை வெளிப்படையாக பேசினார்.
இவருடைய இந்த கருத்துக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சவுத்ரி பேசியது அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறினார்.
இதேபோல் ஜீரோ அவரில் பிரச்சினை எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பண்டோபாத்யாய், நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி 2500 கிலோ சந்தனக்கட்டை வழங்கியதை நினைவுபடுத்தினார்.
பிரதமர் மோடி நாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது, பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள். ரம்ஜான் பண்டிகைக்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்றார்.
வெங்கையா நாயுடுவின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்த சிறிது நேரத்திற்கு சபையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்










Click it and Unblock the Notifications