மோடியை சந்திக்கும் முடிவைக் கைவிட்டார் ஓ.பி.எஸ்.. ஷீரடிக்குப் பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடியைச் சந்திக்கும் முடிவைக் கைவிட்டு விட்டு ஷீரடிக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வந்திருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் பிரதமர் மோடியைச் சந்திக்க திட்டமிட்டு முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி, நேரம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் டெல்லியிலேயே தங்கி காத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது முயற்சிகளை கைவிட்டு விட்டு ஷீரடிக்குப் புறப்பட்டுப் போனார். அவருடன் வா. மைத்ரேயனும் ஷீரடிக்குப் போயுள்ளார்.
முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த பிரதமர், ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை. ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஓபிஎஸ் சென்னை திரும்புவார்.












Click it and Unblock the Notifications