'லாபி'யால் தூக்கியடிப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனர்.. ஷீனா போரா கொலை வழக்கை விசாரிக்கவும் மறுப்பு!
மும்பை: ஊர்க்காவல்படைக்கு தூக்கியடிக்கப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியா சர்ச்சைக்குரிய ஷீனா போரா வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.
நாட்டையே உலுக்கி வரும் ஷீனா போரா வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தவர் ராகேஷ் மரியா. இந்த வழக்கு தொடர்பாக நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்தும் வந்தார்.

இவர் ஏற்கனவே லலித் மோடியை லண்டனில் சந்தித்த விவகாரமும் விஸ்வரூபமெடுத்திருந்தது. இந்த நிலையில் திடீரென ராகேஷ் மரியாவுக்கு புரமோஷன் கொடுத்து ஆனால் ஊர்க்காவல் படைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
ஊர்க்காவல்படை தலைமை இயக்குநராக இருந்த அஹமது ஜாவேத், மும்பை கமிஷனராக நியமிக்கப்பட்டனர்.
ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனது சுயவிருப்பத்தின்படி செயல்பட்டதால் ராகேஷ் மரியா தூக்கியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சத்தின் கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக்ஷி. மும்பை கமிஷனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் மரியா விடுவிக்கப்பட்டதற்கும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஷீனா போரா கொலை வழக்கு விசாரணைக்கு தாம் தலைமை வகிக்கப் போவது இல்லை என்று ராகேஷ் மரியா கூறியுள்ளார். மேலும் ராகேஷ் மரியாவுக்கு எதிரான ஐ.பி.எஸ். அதிகாரிகள் லாபிதான் அவரை தூக்கியடிக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் ஹாட் டாபிக்காக வெடித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications