அவுட்லுக் நிறுவனர் வினோத் மேத்தா காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லி: முதுபெரும் பத்திரிகையாளரும் அவுட்லுக் இதழின் நிறுவனருமான வினோத் மேத்தா இன்று டெல்லியில் காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் 1942 ஆம் ஆண்டு வினோத் மேத்தா பிறந்தார். பின்னர் லக்னோவில் அவரது குடும்பம் குடியேறியது.
அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் 1974 ஆம் ஆண்டு 'டெபோனேர்' இதழில் எடிட்டராக பொறுப்பேற்றார்.

பின்னர் டெல்லியில் குடியேறிய அவர் சண்டே அப்சர்வர், இண்டியன் போஸ்ட், தி இண்டிபெண்டன்ட் ஆகிய பத்திரிகைகளிலும் எடிட்டராக பணிபுரிந்து முத்திரை பதித்தார். அதன் பின் அவுட்லுக் இதழை நிறுவிய அவர், அதன் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் இன்று அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாகவும், நேரடியாகவும் கருத்து தெரிவிப்பவரான வினோத் மேத்தா மிகப்பெரிய பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் என்றும் நினைவில் இருப்பார் என்று கூறியுள்ள மோடி, மேத்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications