"மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகசனம் செய்யுங்கள்.." சொல்வது பாஜக இல்லை காங்கிரஸ்! பின்னணி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மேற்கு வங்கம்
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலத்தில் 355வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சட்டம் ஒழுங்கு
பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். ஜல்தா முனிசிபாலிட்டியில் உள்ள எங்கள் கவுன்சிலர் தபன் காண்டு பாயிண்ட் ப்ளான் ரேஞ்சில் இருந்து கொல்லப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததையும், அதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உடந்தையாக இருக்கிறது.

அவசர நிலை
ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் சரி, போலீஸ் அமைச்சரும் சரி நிலைமையை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டனர். இதனால் மேற்கு வங்கத்தில் 355வது சட்டப்பிரிவை பிரகடனப்படுத்தி அவசர நிலையை பிரகனப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்ட பின்னரும், 355வது சட்டப்பிரிவை மத்திய அரசு பிரகடனப்படுத்த மறுத்தே வருகிறது. இது மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே உள்ள மறைமுக கூட்டணியையே காட்டுகிறது" என்றார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
அதேபோல 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எரிபொருள் விலை பல முறை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில அரசு செயல்படுவதை உறுதி செய்ய மேற்கு வங்கத்தில் 355ஆவது சட்டப்பிரிவைச் செயல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications