பத்மநாபசுவாமி கோவில் சொத்து கணக்கெடுக்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த பொக்கிஷங்கள் பற்றி கணக்கெடுக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கணக்கெடுக்கும் பணிக்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் என்பவர் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்கள் பற்றி ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி இந்திரா தலைமையில், 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இவர்கள் பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் பணியை ஏற்றுக்கொண்டனர்.
திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினரும் தங்களிடம் இருந்த பத்மநாபசுவாமி கோவில் சாவிகளை அந்த குழுவிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த குழுவினர் பத்மநாபசுவாமி கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், கோவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையில் இன்னொரு புதிய குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அதிகாரி வினோத்ராய், திருவனந்தபுரம் வந்தார். அவர், கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பத்மநாபசுவாமி கோவிலின் கடந்த 25 வருட வரவு-செலவு விவரங்களை ஆய்வு செய்யவும், மேலும் சொத்துக்கள் பற்றி கணக்கெடுக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது 2 நாள் ஆய்வை முடித்துக்கொண்டு வினோத் ராய் டெல்லி சென்றுள்ளார். அவர், விரைவில் மீண்டும் திருவனந்தபுரம் வருகிறார். அப்போது கோவில் சொத்துக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) இந்த பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications