ஆடைக் கட்டுப்பாடு தளர்வு.. பத்பநாபசுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள் சுடிதார் அணிய அனுமதி !
பத்பநாபசுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள், சுடிதார், சல்வார் கமீஸ் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பழைமையான பத்மநாப சுவாமி கோயிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என அக் கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க, பெண்கள் இறுக்கமான ஆடைகளையும், சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளையும் அணிந்து கொண்டு கோயிலுக்கு வருவதற்கு நிர்வாகம் கட்டுப்பாட்டு விதித்திருந்தது.

இந்தநிலையில் பெண்கள் கோயிலுக்குள் சுடிதார் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட் பல்வேறு தரப்பினரும் கோயில் இணை ஆணையருக்கு பல்வேறு கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பெண்கள் கோயிலுக்குள் தளர்வான சுடிதார், சல்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரும் வகையில் ஆடைக்கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை பெண்கள் சுடிதார், சில்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து அக்கோவிலுள் இறை வழிபாட்டில் ஈடுபட அனுமதி அளித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications