இனி தாக்குங்க பார்க்கலாம்.. பாகிஸ்தானின் போர் விமானங்கள் - ட்ரோன்களுக்கு இந்தியா வைத்த ஆப்பு.. செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவததை தடுக்க முக்கிய பாதுகாப்பு கருவியை எல்லையில் நம் நாடு நிறுவி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மொத்தம் 26 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

pahalgam-attack-india-deploys-jammers-in-borders-to-disrupt-pakistani-aircraft-and-drones

இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகும். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. எல்லையில் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த மோதலில் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள், ட்ரோன் தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஜாமர் சிஸ்டம்களை இந்தியா கையில் எடுத்துள்ளது. நம் நாட்டிடம் சக்தி வாய்ந்த ஜாமர் தொழில்நுட்பம் உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சம்யுக்தா, ஹிம்சக்தி, ஸ்பெக்ட்ரா, காளி 5000 என்ற ஜாமர் சிஸ்டம்கள் நம் நாட்டிடம் உள்ளது. இது மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படும் தன்மை கொண்டது.

அதாவது அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷ்யாவின் குளோனாஸ் மற்றும் சீனாவின் பீடோ உள்ளிட்ட பல செயற்கைகோள் அடிப்படையிலான கட்டளையிடப்படும் வழித்தடங்களில் கூட தலையிட்டு போர் விமானங்கள், ட்ரோன்களின் சிக்னல்களை தடுக்கும் வல்லமை கொண்டது. அதேபோல் பாகிஸ்தான் பயன்படுத்தும் GNSS செயற்கைகோள் வழித்தட சிக்னல்களையும் இந்த ஜாமர்கள் நிறுத்தும். தற்போது பாகிஸ்தான் போர் விமானங்கள், ட்ரோன்களின் வழிப்பாதைகள் மேற்கூறிய சேட்டிலைட் டெக்னாலஜி அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும். ஆனால் அதனை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட ஜாமர்கள் நம்மிடம் உள்ளது.

இந்த ஜாமர் கருவிகள் தான் தற்போது பாகிஸ்தான் எல்லையில் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதல்களை தடுக்க முடியும். அதாவது எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழையும் விமானங்கள், ட்ரோன்களின் சிக்னல்களை இந்த ஜாமர் கருவிகள் தடுத்து நிறுத்தும். இதன்மூலம் அந்த ட்ரோன் மற்றும் போர் விமானங்களின் பாதைகள் சீர்குலைவதோடு, இலக்கை சரியாக தாக்க முடியாமல் போகலாம்.

முன்னதாக நம் நாடு ஏற்கனவே பாகிஸ்தானின் போர் விமானங்கள், பயணிகள் விமானங்களுக்கு இந்திய வான்எல்லையை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. ஏப்ரல் 30ம் தேதி முதல் மே மாதம் 23ம் தேதி வரை பாகிஸ்தான் விமானங்களால் நம் வான்வெளி பரப்பை பயன்படுத்த முடியாது. மீறி பயன்படுத்தும்போது அதனை சுட்டு வீழ்த்தும் உரிமை கூட நம் நாட்டிடம் உள்ளது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்களை தடுக்கும் வகையிலான ஜாமர்களை காஷ்மீர் எல்லையில் இந்தியா நிறுவி உள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+