ஜம்பமாக வணிகத்தை நிறுத்திய பாகிஸ்தான்! திருப்பூர், கோவைக்கு கூட எந்த பாதிப்பும் கிடையாது! கள நிலவரம்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கொங்கு மண்டலத்தின் கோவை, திருப்பூர் தொழில் துறையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி திடீரென சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பாதிக்கப்படுவதற்கான அபயாம் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு திருப்பூரில் இருந்தே ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான நூல்கள் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, கோவையில் வாகன தளவாடப் பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தக பாதிப்பு, கோவை, திருப்பூரின் தொழில் துறையில் பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தால் எம்எஸ்எம்இ துறையில் எந்தளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளால் இதுவரை நம் துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதில்லை. உதாரணமாக உக்ரைன் போரினாலும் கூட எந்தவொரு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை.

அமெரிக்கா வரி விதிப்பால் 5 முதல் 7 சதவீதம் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும், வரி விதிப்பு 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலையும் மாறும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்தே பாதுகாப்புத் துறைக்கான மூலப் பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுகிறது. ரஷ்ய போரால் கூட நமக்கு வர்த்தகம் கொஞ்சம் தாமதமானதே தவிர பாதிப்பு ஏற்படவில்லை. கோவை, திருப்பூர் தொழில் துறையைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லை என்பதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றார்.
இதுகுறித்து திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் நம்மிடம் கூறியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலும், மாநிலத்தின் பொருளாதர பங்களிப்பிலும் கோவை, திருப்பூர் முக்கியப் பங்காற்றி வருகிறது. கோவையில் நூற்பாலைகள், இயந்திரங்கள், வாகன தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், பம்புசெட், கிரைண்டர் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் தயாரிக்கப்படும் நூல்கள், திருப்பூரில் துணியாக மாற்றப்பட்டு ரெடிமேடு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ஆயத்த ஆடைகள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. டெக்ஸ்டைல் துறையைப் பொருத்தவரை பாகிஸ்தான் - இந்தியாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நம் நாட்டின் நேச நாடுகளான யுரோப், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே மட்டுமே நாம் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறோம்.

பாகிஸ்தானிடம் இதுவரை நாம் வர்த்தகம் மேற்கொண்டதில்லை. எல்லையில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே பிரச்சனை ஏற்படுமே தவிர வர்த்தகத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இதற்கு முன்பு ஏற்பட்ட பாதிப்புகளினாலும் கூட டெக்ஸ்டைல் வர்த்தகத்து எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்ற பின்னர் டெக்ஸ்டைல் துறையில் நமக்கு போட்டியாக உள்ள நாடுகளுக்கு வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிற்கு குறைந்த வரியே விதிக்கப்பட்டுள்ளதால் நம் நாட்டை நோக்கியே ஆர்டர்கள் அதிகளவில் வருகின்றனர். டெக்ஸ்டைல் துறையைப் பொருத்தவரை நமக்கு போட்டி நாடுகள் என்றால் சீனா, வியட்நாம், பாகிஸ்தான்தான். தற்போது அந்த நாடுகளுக்கு வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் ஆடர்கள் தற்போது நம் நாட்டுக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன என்றார்.
இதுகுறித்து, டீ அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், பாகிஸ்தானைப் பொருத்தவரை அந்நாட்டிலேயே ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. டெக்ஸ்டைல் துறையைப் பொருத்தவரை பாகிஸ்தான் நமக்கு போட்டி நாடாகவே உள்ளது. அதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதிப்பு ஏற்பட்டால் டெக்ஸ்டைல் தொழில் துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றார்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications