முதலில் நாங்கள் இந்தியர்கள்.. தீவிரவாதிகளை கண்டித்து காஷ்மீர் உள்ளூர் மக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம்
ஸ்ரீநகர்: பஹல்காம் மண்ணில் பயங்கரவாதத்தால் சிந்திய ரத்தம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறவில்லை. துயரத்தின் நிழலில் மூழ்கியுள்ள பஹல்காம் மக்கள், தங்கள் ஆழ்ந்த சோகத்தையும், பயங்கரவாதத்திற்கு எதிரான கொந்தளிப்பையும் வெளிப்படுத்த ஒரு நெஞ்சை உருக்கும் மெழுகுவர்த்தி பேரணியை நடத்தியுள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஏப்ரல் 22ம் தேதி இரவு, பஹல்காமின் வீதிகளில் இருளைக் கிழித்தபடி நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்திகளை ஏந்தி அமைதியாக அணிவகுத்துச் சென்றனர். அன்றைய தினம் மதியம் நடந்த கோரமான பயங்கரவாத தாக்குதலில் உயிர்களைப் பலிகொடுத்த தங்களின் சகோதர சகோதரிகளுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் அவர்கள் கண்ணீர் மல்கினர். பயங்கரவாதத்தின் கோரத் தாண்டவத்தை அவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த துயரம் நிறைந்த தருணத்தில் பேசிய பேரணியில் பங்கேற்ற ஒருவர், வார்த்தைகள் தழுதழுக்க, "இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் உறுதியாகக் கண்டிக்கிறோம். முதலில் நாங்கள் இந்தியாவின் குடிமக்கள், அதன் பிறகுதான் காஷ்மீரின் பஹல்காமின் குடியிருப்பாளர்கள்" என்று கூறியபோது, ஒட்டுமொத்த கூட்டமும் சோகத்திலும் உறுதியிலும் உறைந்தது. பயங்கரவாதத்திற்கு தேசம் ஒன்றுபட்டு நிற்கும் என்பதை இந்த வார்த்தைகள் உணர்த்தின.
செவ்வாய்க்கிழமை மதியம் பஹல்காம் அருகே உள்ள புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூரச் சம்பவத்தின் நினைவுகள் மனதை விட்டு அகலாத நிலையில், பஹல்காம் மக்களின் இந்த மெழுகுவர்த்தி பேரணி, பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் அணையாத தீயையும், நீதிக்கான அவர்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
🕯️ Locals in Pahalgam hold candle march for attack victims of terrorist attack in Jammu and Kashmir, demanding justice and peace. #Pahalgam #JusticeForVictims #PahalgamAttack #PahalgamTerroristAttack pic.twitter.com/E2zHKNsM2Q
— Kashmir Outlook (@kashmiroutlook1) April 22, 2025
மெழுகுவர்த்திகளின் மங்காத வெளிச்சத்தில், துயரமும் உறுதியும் கலந்த முகங்களுடன், பஹல்காம் மக்கள் அமைதியையும், பயங்கரவாதத்தின் முடிவையும் வேண்டி நின்றனர். தங்களுக்கு நீதி வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை, ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தது.
இதனிடையே, ஊர்வலத்தில் சென்றவர்கள் சிரித்தபடி போனதாக, பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications