அந்த மனசுதான் சார் கடவுள்.. இந்தியாவின் மனிதாபிமான செயல்.. பாகிஸ்தான் நெகிழ்ச்சி
ஶ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல், சிந்தூர் பதிலடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவாகரங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. இருநாட்டு உறவில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்த முறிவால் தகவல் பரிமாற்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்தியா சார்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டது. இது இரண்டு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர் நின்றாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமூகமாக இல்லை.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து
அதன் தொடர்ச்சியாக சிந்து நதி நீர் ஒப்பந்தமும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் நாட்டிற்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பலமுறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தும், கோரிக்கை வைத்தும் பார்த்துவிட்டது. ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்ததில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு சொல்லிவிட்டது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி சிந்து நதியின் துணை நதிகளான சட்லஜ், பியாஸ், ரவி தண்ணீர் இந்தியாவுக்கும் சிந்து, செனாப், ஜீலம் ஆகிய நதிகளின் தண்ணீர் பாகிஸ்தான் நாட்டிற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும், இந்த ஒப்பந்தம் இருந்தபோது நீர் மட்டம், வெள்ள அபாயம் உள்ளிட்டவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தகவல் பரிமாறி வந்தனர். ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து விதமான தகவல் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. தாவி நதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வலுப்பெறுமா உறவு
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை கூறுகையில், "சிந்து நதி ஒப்பந்தம் இருந்தபோது இந்த தகவல்கள் சிந்து நதிநீர் ஆணையர் மூலம் பரிமாறப்பட்டது. தாவி நதியை பொறுத்தவரை இது இமயமலையில் உற்பத்தியாகி, ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் செனாப் நதிக்கு செல்கிறது. மழை காரணமாக அங்கு அதிகளவு தண்ணீர் உள்ளது.
இதனால் இந்திய தூதர் மூலமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் எல்லையில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. " என்றனர். இது பாகிஸ்தானுக்கு உதவியாக அமைந்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு மீண்டும் வலுபெறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications