30 நிமிட திக் திக்.. இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்.. பரபரப்பு வீடியோ!
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது.
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது.
காஷ்மீரின் பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் இந்த அத்துமீறலை நிகழ்த்தி உள்ளது. அந்த ஹெலிகாப்டர் உள்ளே வருவது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் வரிசையாக கடத்தி கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். போலீசாரும் கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள்.

எல்லைக்குள் வந்தது
சரியாக 12.05 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் முதலில் இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் 30 நிமிடம் இந்திய எல்லைக்குள்தான் சுற்றி இருக்கிறது. கடைசியாக காஷ்மீர் எல்லையில் சுற்றிவிட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரை நோக்கி சென்றுள்ளது.

எதனால் தவறு
இரண்டு நாடுகளின் ஒப்பந்தம்படி இது தவறாகும். அனுமதி இல்லாமல் இரண்டு ஹெலிகாப்டர்கள் அடுத்த நாட்டிற்கு செல்ல கூடாது. அப்படி செல்லும் பட்சத்தில் அதை சுட்டு வீழ்த்த இரண்டு நாட்டிற்கு உரிமை உள்ளது. இது அமைதி உடன்படிக்கை மீறலாகும்.
|
சுடுவதற்கு முயற்சி
இதனால் இந்திய ராணுவ வீரர்கள் அதை சுட முயற்சி செய்து இருக்கிறார்கள். கால் மணி நேரம் இப்படி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். அது ராணுவம் விமானம் போல தெரியவில்லை, எதோ ஒரு தனியார் விமானம் என்று கூறப்படுகிறது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

பதட்டம் அதிகரிப்பு
ஆனால் அந்த ஹெலிகாப்டர் சுடப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது ஐநாவில் மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications