டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது.. ராணுவ ரகசியங்களை உளவு பார்த்தது அம்பலம்!
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இரு நாட்டு உறவில் இது மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றும் மெகமூத் அக்தர் என்பவர் கைது செய்யப்பட்ட நபராகும். இவர் கடந்த இரு மாதங்களாகவே, இந்திய பாதுகாப்பு துறை தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து வந்ததை உளவுத்துறை, டெல்லி, சாணக்யாபுரி காவல் நிலையத்தில் புகாராக அளித்தது.

இதையடுத்து, போலீசார் அதிரடியாக மெகமூத் அக்தரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து, இந்திய பாதுகாப்பு, ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் 'ஒன்இந்தியா'விடம் தெரிவித்தன.
ராணுவ உளவு தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் முன்பாகவே, மெகமூத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. இவருக்கு தகவல்களை சேகரிக்க, உள்நாட்டில் உடைந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் யூரியில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணமடைய காரணமாக இருந்ததால் இரு நாட்டு உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சர்ஜிகல் தாக்குதல் அந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான், பாகிஸ்தான் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications