கீதாவை அனுப்பிய பாகிஸ்தான், ரம்ஜானை அனுப்பி வைக்கும் இந்தியா
டெல்லி: கீதா நாடு திரும்பியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் சிறுவன் ரம்ஜானை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
8 வயதில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா 15 ஆண்டுகள் கழித்து திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் முகமது ரம்ஜான்(15) மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2013ம் ஆண்டு சிக்கினார்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த அவர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரம்ஜானின் தந்தை தனது மனைவியை விட்டு பிரிகையில் மகனை அழைத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் குடியேறினார்.
வங்கதேசத்தில் அவர் மறுமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் ரம்ஜான் கடந்த 2013ம் ஆண்டு வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டார். ரம்ஜானின் தாய் கராச்சி நகரில் வசித்து வருகிறார்.
அவர் தனது மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கீதா இந்தியா திரும்ப காரணமாக இருந்த பிரபல பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அன்சார் பர்னியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரம்ஜான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று முன்பு மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் ரம்ஜானை அவரின் தாயுடன் சேர்த்து வைக்குமாறு பர்னி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரம்ஜானை அவரது தாயுடன் சேர்த்து வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications