பொக்ரானில் ஒரு பிடி மண்ணை அள்ள 16 வருடமாக போராடும் பாகிஸ்தான்!
ஜெய்ப்பூர்: இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இருந்து மணல் மாதிரியை எடுக்க அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1998ம் ஆண்டு மே 11ம் தேதி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. உலகிலேயே அணுகுண்டு சோதனை நடத்திய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

அமெரிக்கா அதிர்ச்சி
அணுகுண்டு சோதனை நடந்தபோது நவீன உளவு கருவிகளை வைத்துள்ள அமெரிக்காவாலேயே அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியா அறிவித்தபிறகுதான் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு இந்தியாமீது பொருளாதார தடையை விதித்தது.

அப்துல் கலாம் டீம்
அப்துல் கலாம் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகளின் இந்த 'கண்மூடி வித்தையை' கண்டுபிடிக்க அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும்,. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து முயன்று வருவதாக இந்திய உளவுத்துறை கூறுகிறது.

அணுகுண்டு சோதனை .இடத்துக்குள் நுழைய முடியவில்லை-சிஐஏ
ஆயினும் எல்லை பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பை மீறி வெடிகுண்டு சோதனை நடந்த இடத்துக்கு யாராலும் செல்ல முடியவில்லை. தங்களால் முயன்று பார்த்தும், அணுகுண்டு சோதனை நடந்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை என்பதை சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜார்ஜ் டெனன்ட் ஒப்புக்கொள்கிறார்.

மணலை எடுத்துச் சென்று...
அணுகுண்டு சோதனை நடந்த இடத்திலுள்ள மணலை எடுத்துச் சென்று, அணுகுண்டின் தன்மையை கண்டுபிடிக்க பாகிஸ்தான் முயன்றுவந்தாலும் அதை தகுந்த பாதுகாப்பு மூலம் தடுத்து வருகிறோம் என்று இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒருபிடி மண்ணைக்கூட..
அணுகுண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு நான்கு கட்ட சோதனைகளுக்கு பிறகே அப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அணுகுண்டு சோதனை நடந்து 16 ஆண்டுகள் ஆன பிறகும் அங்கிருந்து
ஒருபிடி மண்ணைக்கூட அன்னிய நாட்டுக்கு விட்டுத்தராமல் தீரத்துடன் பாதுகாத்து வருகிறார்கள் நமது ராணுவ வீரர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications