சீனா கொடுத்த தைரியம்.. காஷ்மீர் எல்லையில் பாக். சரமாரி தாக்குதல்.. இந்திய வீரர் பலி.. அதிர்ச்சி!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுகள் தற்போது எல்லையில் இந்தியாவை நெருக்க தொடங்கி உள்ளது. நேபாளம் இந்தியாவிற்கு எதிராக மேப் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் இடங்களை தனக்கு சொந்தமென்று கூறி நேபாளம் மேப் வெளியிட்டுள்ளது .
அதேபோல் இன்னொரு பக்கம் லடாக் எல்லையில் சீனா தொடந்து அத்துமீறி வருகிறது. அங்கிருக்கும் பாங்காங் திசோ பகுதியில் இன்னும் சீனா தனது படைகளை திரும்ப பெறவில்லை.

துப்பாக்கி சூடு
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியான சம்பவ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. அங்கு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருகிறது.

எந்த இடம்
அதிலும் முக்கியமாக பூன்ச் மற்றும் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக தீவிரமாக அத்துமீறி வருகிறது. முக்கியமாக நேற்று இரவில் இருந்து பாகிஸ்தான் விடாமல் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. அங்கு ஷாபூர் -கெர்னி பகுதியில் தொடங்கிய துப்பாக்கி சூடு இன்னும் முடியவில்லை. இதில்தான் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்து இருக்கிறார்.

தொடர்ந்த பதிலடி
இந்திய ராணுவம் இதற்கு உடனடியாக பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு இந்திய ராணுவ படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் இப்படி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கடந்த ஜூன் 4ம் தேதி பலியான ராணுவ வீரர் தமிழகத்தை சேர்ந்த முத்தழகன் என்பது குறிப்பிடத்தக்கது .

சீனாவின் செயல்
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பின் சீனா இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். சீனா ஏற்கனவே நேபாளத்தை வைத்து இந்தியாவை நெருக்கி வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் உடன் சீனா மிகவும் நெருக்கமாக இருக்கிறது. தற்போது அடுத்தகட்டமாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தவும் எல்லையில் அத்துமீறவும் தொடங்கி உள்ளது. சீனா கொடுத்த தைரியம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதற்கு இந்தியா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications