ஜம்முவில் மூன்றாவது நாளாக துப்பாக்கிச் சண்டை... பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா!
ஜம்மு : ஜம்முகாஷ்மீரின் எல்லைப் பகுதியில் மூன்றாவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பூஞ்ச் பகுதியில் நேற்று காலையில் பாகிஸ்தான் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து தாக்குதலை நடத்தினர். கிருஷ்ணா கதி செக்டாரில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனிடையே திங்கட்கிழமை காலையிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இந்திய ராணுவ கூடாரங்கள் மற்றும் எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள கிராமங்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் மூன்றாவது தாக்குதல் இது.
பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் கொடுத்து வருவதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பூஞ்ச்சில் உள்ள கலகோடே செக்டாரிலுள்ள டெக்வார் மற்றும் குல்புர் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சண்டை காரணமாக டெக்வார் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications