எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா தக்க பதிலடி
ஸ்ரீநகர்: உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திடீர் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அரங்கேற்றி உள்ளது.
இதற்கிடையே, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொண்டுள்ளன. இதுவரை மோதிய அனைத்து போட்டிகளிலும், இந்திய அணிகளே வெற்றிகளை குவித்துள்ளன.
இந்தநிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications