ஜம்மு காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை- பாக். திடீர் தாக்குதலுக்கும் செம்ம பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று எல்லையில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு நமது ராணுவம் அதிரடியான பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது எல்லையில் ஊடுருவ பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த படியே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது.
எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மீதான இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியை தொடருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பயங்கரவாதிகளை எல்லைகளில் தொடர்ந்து ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இது தொடர்பான மோதல்களில் கடந்த சில வாரங்களில் மொத்தம் 10 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகளை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. இதனால் எல்லைகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு நமது ராணுவத்தின் தரப்பிலும் கடும் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் ஜம்முவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்த ஆத்திரத்தில் பாகிஸ்தான் எல்லையில் திடீர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications