பிளானே வேற.. பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு! இரவோடு இரவாக அதிபர் அதிரடி! ஏன்? பரபர பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் பாக்கி இருந்த நிலையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்ட நிலையில் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018 ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.

பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார்.
இதற்கிடையே தான் அவருக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதையடுத்து இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
நில முறைகேடு, கருவூல மோசடி தொடர்பான விசாரணைகள் தீவிரமாகின. இந்நிலையில் தான் கருவூல மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இருக்கும் நிலையில் முன்கூட்டியே அவர் கலைக்க உள்ளதாகவும் விரைவில் அவர் அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி நேற்று இரவு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இரவோடு, இரவாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் நாடாளுமன்றம் கலைப்புக்கு பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நாடாளுமன்றம் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாறாக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தால் அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்காக 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.
தற்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை செய்ய கூடுதல் காலத்தை பெறும். இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் இன்னொரு திட்டத்தையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அது என்னவெனில் பொருளாதார நெருக்கடி, வெள்ள பாதிப்புகளை சரியாக கையாளாமல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இம்ரான் கானிடம் இருந்து அவர் ஆட்சியை பறித்துள்ளதோடுஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறையில் அடைத்துள்ளதாக ஒரு பிம்பம் பாகிஸ்தானில் உள்ளது. இதனை உடைக்க வேண்டும். இதனை மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்ய வேண்டும். மேலும் பிரதான எதிரியான இம்ரான் கான் சிறையில் உள்ளதோடு 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருக்கிறது. இதனால் 30 நாள் கூடுதல் காலஅவகாசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஷெபாஸ் ஷெரீப் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications