வரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்!
டெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலை பனாமா நாட்டின் சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.
இதில், உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள்...
இந்தப் பட்டியலில் இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் பிரபலமானவர்கள்.

அமிதாப்...
குறிப்பாக இந்தப் பட்டியலில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டெல்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உள்ளனர்.

தலைவர்கள்...
இந்தப் பட்டியலில் இந்தியர்கள் தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்து...
கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications