டிரீம்லைனருக்கு தொடரும் சோதனை... பெங்களூர் வந்த விமானத்திலிருந்து கழன்று விழுந்த பேனல்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது விமானத்தில் 150 பயணிகளும், ஊழியர்களும் இருந்துள்ளனர். மிகப் பெரிய அபாயகரமான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் விமானம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தரையிறங்கியுள்ளது.
விமானத்தின் வயிற்றுப் பகுதியிலிருந்து இந்த மிகப் பெரிய பேனல் கழன்று விழுந்துள்ளது.இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கீழே விழுந்த பேனல் எட்டுக்கு 4 அடி வடிவிலானது. எரிபொருள் டேங்க் பகுதியிலிருந்து இது விழுந்துள்ளது. இந்த விமானம் டெல்லியிலிருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்தது. பேனல் விழுந்ததால் விமானத்தின் சரக்குப் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர் விமான நிலைய ஊழியர்கள், விமானத்தை பரிசோதித்தபோதுதான் அதில் ஓட்டை ஏற்பட்டிருப்பதையும், பேனல் விழுந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக வேறு ஒரு உபரி பேனல் வரவழைக்கப்பட்டு அதைப் பொருத்திய பின்னர் அந்த விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. ஆனால் விமானம் மீண்டும் டெல்லிக்குக் கிளம்ப 9 மணி நேரம் தாமதமானது.
ஏற்கனவே ட்ரீம்லைனர் விமானங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் பேனல் கீழே விழுந்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications