பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிராக திரண்ட பெங்களூர் பெற்றோர்! சொந்தமாக பள்ளி ஆரம்பிக்க முடிவு
பெங்களூர்: ஆண்டுதோறும் கல்வி கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த பெற்றோர், தாங்களே இணைந்து பள்ளி நடத்த முடிவு செய்து ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர்.
பெங்களூர் ஒயிட்பீல்ட் பகுதி பெற்றோருக்கு உள்ள இந்த துணிவு, பிற மக்களுக்கும் வந்தால் கல்வி கட்டண கொள்ளைக்கு முடிவு வரும் என்று நம்பலாம்.

பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ளது ஒயிட்பீல்ட். இங்குள்ள ஒரு தனியார் பள்ளி வருடந்தோறும் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்துவது வழக்கமாம். இந்த ஆண்டும் அதேபோல கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனால் கோபமடைந்த சுமார் 300 பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, நாமே இணைந்து பள்ளி நடத்தலாமே என ஆலோசித்துள்ளனர். இதில் பலரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகும். இவர்கள் 'கர்நாடகா பள்ளிகள் பெற்றோர்' என்ற பெயரில் சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுவரை 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களில் 3வது கூட்டம் நடத்தி, யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பை ஒதுக்குவது என்பதை தீர்மானிக்க உள்ளனர்.
பள்ளி தொடங்க 2 ஏக்கர் நிலவரத்தை இலவசமாக அளிக்க 3 தொழிலதிபர்கள் தயாராக உள்ளதாகவும், லாபமோ, நஷ்டமோ இல்லாத அளவுக்கு இப்பள்ளிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சங்கத்தின் துணை தலைவர் செல்வராஜ் மாரியப்பன் தெரிவிக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications