"உனக்கு பிடித்த பைக்கிலேயே விண்ணுலகம் செல்"! இறந்த மகனுடன், பைக்கையும் நல்லடக்கம் செய்த பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம், நாடியாத் அருகே உள்ள விபத்தில் சிக்கி 12 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகன் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலுடன் பைக்கையும் சேர்த்து வைத்து பெற்றோர் நல்லடக்கம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் நாடியாத் அருகே உள்ளது உத்தரசந்தா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ் பர்மர் (18). இவர் கடந்த மே 26ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

gujarat bike accident

அப்போது கல்லூரி முடிந்து பைக்கில் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு டிராக்டரில் கிரிஷின் பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிரிஷிற்கு தலை, உடலில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிஷுக்கு 12 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த சிகிச்சை பலனின்றி கிரிஷ் உயிரிழந்தார். அவரது இறப்பால் பெற்றோர் கதறி அழுதனர். கிரிஷ் அண்மையில்தான் 12 ஆம் வகுப்பை முடித்தாராம். அவருக்கு BCA படிக்க விரும்பினாராம்.

அந்த படிப்பு குறித்து தகவல்களை அறிய கிரிஷ் சென்ற போதுதான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. கிரிஷுக்கு அந்த பைக் என்றால் மிகவும் பிடிக்குமாம். எங்கு சென்றாலும் அந்த பைக்கில்தான் பயணம் செய்வாராம். இந்த நிலையில் கிரிஷ் இறந்ததை அடுத்து அவரது உடலை நல்லடம் செய்யும் போது அவர் விரும்பிய பொருட்கள் , பைக் ஆகியவற்றையும் சேர்த்து வைக்கலாம் என முடிவு செய்தனராம்.

அதன்படி கிரிஷின் பைக், அவரது உடைகள், கண்ணாடி, செருப்பு, ஷூ உள்ளிட்டவை அனைத்தும் குழிக்குள் வைக்கப்பட்டு கிரிஷுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நெஞ்சை பதற வைத்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+