வரவேற்பு + வழிகாட்டல்.... புதிய எம்.பிக்களை வரவேற்கத் தயார் நிலையில் டெல்லி!
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்களை வரவேற்கவும், வழிகாட்டவும் நாடாளுமன்றத்தில் மிகவும் விரிவான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் 1 மணிவாக்கில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற அணி குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாளை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மன்மோகன் சிங். அதனைத் தொடர்ந்து மத்தியில் வரும் 20ம் தேதிவாக்கில் புதிய ஆட்சி அமையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்கவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் டெல்லி தயாராகிவிட்டது.
இது தொடர்பாக நாடாளுமன்றச் செயலாளர் பி.ஸ்ரீதரன் நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தற்காலிக சபாநாயகர்...
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதிய அரசுடன் கலந்து ஆலோசித்து 16-வது நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் கூட்ட தேதியை அறிவிப்பார். புதிய அரசின் பரிந்துரையுடன் ஜனாதிபதி தற்காலிக சபாநாயகரை நியமிப்பார். பாரம்பரியமாக அவையின் மூத்த உறுப்பினர் தான் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார். ஆனால் இதற்கு விதிகள் எதுவும் இல்லை.

குழு தலைவர்கள்...
தற்காலிக சபாநாயகருடன், குழு தலைவர்களாக 2 அல்லது 3 பேரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். ஒருவேளை ஏதேனும் காரணமாக தற்காலிக சபாநாயகர் அவைக்கு வரமுடியவில்லை என்றால் அந்த குழு தலைவர்கள் அவையை நடத்துவார்கள்.

543 எம்.பி.க்கள்...
புதிய எம்.பி.க்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறைந்தபட்சம் 2 நாட்கள் நடைபெறும். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543.

4வது நாளில்...
கடந்த முறை மே 18-ந் தேதி பழைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. புதிய அரசு அமைக்கப்பட்டு 4-வது நாளில் நாடாளுமன்றம், மேல்-சபை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

தற்காலிக இருப்பிடம்...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் தற்காலிகமாக ஓட்டல் அசோகாவில் தங்க வைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு வீட்டுவசதி குழு உரிய வீடுகளை ஒதுக்கும். புதிய எம்.பி.க்களை வரவேற்பதற்கான அனைத்து மையங்களிலும் இன்று பிற்பகலில் இருந்து பணிகள் தொடங்கிவிடும்.

6 வழிகாட்டும் மையங்கள்...
டெல்லியில் இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலையம் (முனையம் 1-டி மற்றும் முனையம் 3) ஆகிய இடங்களிலும், ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் உள்பட 6 இடங்களில் வழிகாட்டும் மையங்கள் புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டும் மையங்கள் 21-ந்தேதி வரை செயல்படும்.

வழிகாட்டும் மையங்கள்...
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 62-ல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புதிய உறுப்பினர்களின் பதிவு, தற்காலிக தங்குமிடங்கள் உள்பட அனைத்துவிதமான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். உறுப்பினர்கள் இந்த மையத்தில் அடையாள அட்டை மற்றும் ரயில்வே சலுகை அட்டைக்கான புகைப்படங்களை எடுத்து கொள்ளலாம்.

கையேடுகள்...
இந்த மையத்தில் உறுப்பினர்களுக்கு இந்திய அரசியல்சாசனம், நாடாளுமன்ற நடத்தை விதிகள் போன்ற நூல்கள், கையேடுகள் ஆகியவையும் வழங்கப்படும். உறுப்பினர்களின் வசதிக்காக பல்வேறு தொலைபேசிகளும் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன' என இவ்வாறு பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications