நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அவையில் என்ன நடக்கும்? என்னென்ன மசோதாக்கள் தாக்கலாகும்?
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடரின் 11வது நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பல்வேறு காரணங்களால் அவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக விவசாய சட்டங்கள் மூன்றும் ரத்து செய்யப்பட்ட போது அதை பற்றி அரசு தரப்பில் விவாதம் நடத்தப்படவில்லை.
அவையில் விவாதம் நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது. அதேபோல் ராஜ்ய சபாவில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக அவை பல முறை முடங்கிய நிலையில் இன்று மீண்டும் அவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றும் அவை முடங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நேற்று மக்களவையில் போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சர்வீஸ் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை
இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார்.
மாநிலங்களவை
அதேபோல் மாநிலங்களவையில் டாக்டர் ஜித்தேந்தர் சிங் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அமைப்பு 2003ல் மேலும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் தனி நபர் மசோதா கொண்டு வரவுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications