பாஜகவை எதிர்க்கும் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் சங்கமிக்கும் குமாரசாமி பதவியேற்பு விழா!
கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க பல்வேறு கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கர்நாடகாவின் 24வது முதல்வராக பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தியைத் தவிர பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
கர்நாடக முதல்வராக பதவியேற்ற பாஜகவின் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 58 மணி நேரத்தில் பதவியில் இருந்து விலகினார்.

சட்டசபை தேர்தலில் 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி,. 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க உரிமை கோரியது.
அதையடுத்து மஜத தலைவர் குமாரசாமியை முதல்வராக பதவியேற்கும்படி கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று அழைப்பு விடுத்தார்.
வரும் திங்கள்கிழமை பெங்களூரு காண்டீவரா மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்க உள்ளது.
இதில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதைத் தவிர பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோருக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமாரசாமியின் பதவியேற்பு விழா, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் சங்கமிக்கும் கூட்டமாக அமைய உள்ளது.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications