அப்பாவின் அரசு துப்பாக்கிச் சூட்டில்... மகனோ, மது, மாது, பார்ட்டிகளில்!
ஹைதராபாத்: ஒரு பக்கம் அப்பா சந்திரபாபு நாயுடுவின் அரசு, அப்பாவித் தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று குவித்து வரும் நிலையில் மகன் நர லோகேஷோ, அமெரிக்காவில் தனது நண்பர்களுடம், பெண்களுடனும், மது உள்ளிட்ட பார்ட்டிகளில் பொழுதைக் கழித்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, நாயுடு அன் கோவுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தெலுங்கு தேசத்தில் நாயுடுவுக்கு அடுத்து நர லோகேஷ்தான் தலைவராவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். நாயுடுவும், தனது மகனுக்கேற்றார் போல கட்சியையும், ஆட்சியையும் ரெடி செய்து வைத்து வருகிறார். இந்த நிலையில்தான் லோகேஷ் போட்ட ஆட்டம் குறித்த படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தப் படங்கள் முதலில் 'India-unofficial.blogspot.com' என்ற பிளாக்கில் வெளியாகியிருந்தது. பின்னர் அதை எடுத்து விட்டனர். ஆனால் தற்போது இந்தப் படங்களை பேஸ்புக்கி் நீக்கமறக் காண முடிகிறது.

சமீபத்தில் கூட விசாகப்பட்டனத்தில் ஹூட் ஹுட் புயல் தாக்கியபோது நாயுடுவின் மகன் தனது மனைவியோடு ஆடம்பர ஹோட்டலில் விருந்து சாப்பிட்டு அது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் இந்தப் பார்ட்டி படம் வெளியாகியுள்ளது.

நர லோகேஷ், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தி்ல் படித்து வருகிறார். இந்தப் படங்களில் தனது பெண் தோழிகளோடு விளையாடியபடியும், நீச்சலடித்தபடியும், மது அருந்தியபடியும் அவர் காணப்படுகிறார்.
இந்தப் படங்கள் நிச்சயம் லோகேஷுக்கு மட்டுமல்லாமல் சந்திரபாபு நாயுடுவின் இமேஜுக்கும் வேட்டு வைக்கும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications