புதன்கிழமையும்... ராஜ்குமார் - பர்வதம்மா மரணமும்!
பெங்களூர்: ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோர் மறைவிலும் உள்ள ஒரு ஒற்றுமை கர்நாடக மக்களின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் உடல் நலக் குறைபாடு காரணமாக பர்வதம்மா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.40 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கன்னடத்து எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டவர் ராஜ்குமார். அவர் கடந்த கடந்த 2006-ஆம் ஆண்டு, பிப்ரவரி 12-ஆம் தேதி உயிரிழந்தார். அது புதன்கிழமையாகும். அவரது மனைவி பர்வதம்மா மே 31-ஆம் தேதி இன்று உயிரிழந்துள்ளார். இன்றும் புதன்கிழமை.
உயிருடன் இருந்தபோது ராஜ்குமாரும், பர்வதம்மாவும் அவ்வளவு அன்னியோன்யமாக இருப்பார்கள். மனைவி மீது அதிக பாசம் கொண்டவர் ராஜ்குமார். அதேபோல கணவரின் உயர்வுக்கு பர்வதம்மாவின் அர்ப்பணிப்பும் ஒரு காரணம். அவரும் கூட திரைத் துறையில் சாதனை படைத்தவர்தான். இப்போது இவர்களின் மறைவும் கூட ஒரே தினத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பர்வதம்மாவின் உடல், அவரது கணவர் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ காண்டீர்வா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications