தனியார் துறையில் எஸ்சி, எஸ்டி, பிசி-க்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு- பஸ்வான் மீண்டும் வலியுறுத்தல்
டெல்லி: தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகாலமான பின்னரும்கூட தலித்துகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை பார்க்கிறோம். ஆகையால் தனியார்துறையிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு தாலுகாக்களிலும் உறைவிடப் பள்ளிகளை அமைக்க வேண்டும். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிடும்.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையிலும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட் வேண்டும் என்பதை பஸ்வான் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications