பாஸ்வானைத் தேடி அவரது வீட்டுக்குப் போன பாஜக தலைவர்கள்
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிப் போய் 12 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் மீண்டும் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி. பாஜக தலைவர்கள் குழு பாஸ்வானை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது.
முன்னதாக மோடியை பாஸ்வான் சந்திப்பார் என்று தகவல்கள் கூறியிருந்தன. ஆனால் தற்போது பாஜகவின் 2ம் கட்டத் தலைவர்கள், அவரது வீடு தேடி வந்து சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தக் குழுவில் ரவிச்ங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஸ்வான், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் வன்முனறையைக் காரணம் காட்டித்தான் கூட்டணியை விட்டு விலகினார் பாஸ்வான். ஆனால் தற்போது தேர்தல் நெருங்குகிறதே என்ற ஒரே காரணத்துக்காக அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்புகிறார்.
ராம் விலாஸ் பாஸாவானின் வருகையால் தலித் வாக்குகளை சற்றுக் கவர முடியும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கருதுகிறது.
பீகார் மாநிலத்தில் 8 இடங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாஸ்வான் கட்சி போட்டியிடும் என்று தெரிகிறது. முதலில் அது 10 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் 8 சீட் தர பாஜக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து கருத்துக் கூற மறுத்திருந்தார். வலுவான கூட்டணி அமையும், அதில் எனது கட்சி இருக்கும் என்று மட்டுமே கூறியிருந்தார்.
பாஸ்வான், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்புவதால் அவரது வைரியான லாலு பிரசாத் யாதவுக்கும், காங்கிரஸுக்கும் பாஸ்வான் ஆதரவு பீகார்ப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications