அடேங்கப்பா... நடிகர் கார்த்திக் அணியில் பாஸ்வான் கட்சி...டெல்லி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
டெல்லி: தமது தலைமையிலான விடியல் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இணைய உள்ளதாக நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் கார்த்திக் கூறினார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி இணையக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் திமுக, கார்த்திக் கட்சியை கழற்றிவிட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக அணியில் இருந்து விலகிய டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து விடியல் கூட்டணியை நடிகர் கார்த்திக் உருவாக்கினார். இதனிடையே டெல்லி சென்ற நடிகர் கார்த்திக் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானை நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்திக் கூறியதாவது:
வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் விடியல் கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகள் பற்றிய இறுதி முடிவை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சித்தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.
தமிழகத்தில் விடியல் கூட்டணியின் தேர்தல் பணிகள் குறித்தும் தொகுதிப் பங்கீடு, பிரசார உத்திகள் குறித்தும் நாங்கள் விரிவாக பேசினோம். அப்போது அவர், விடியல் கூட்டணியில் சேருவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவோம்.
அத்துடன் விடியல் கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற விவரத்தையும் விரைவில் அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக அமைந்து வருகிறது. வருகிற தேர்தலில் இந்தக் கூட்டணி பெருமளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ராம்விலாஸ் பஸ்வான் விரைவில் தமிழகத்துக்கு வருகை தந்து எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொள்வார். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications