பதன்கோட்டில் எங்கு செல்லலாம், யாரிடம் விசாரிக்கலாம்..? பாக். விசாரணை குழுவிற்கு பல கட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சண்டீகர்: பதன்கோட் விமான தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு காரணம், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
எனவே, இந்த விவகாரத்தை விசாரிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. தனது விசாரணை குழுவை அனுப்பி விசாரிக்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அரசு சம்மதித்தது. இதையடுத்து, பதன்கோட்டுக்கு இன்று பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு வந்துள்ளது.
பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு, பதன்கோட் விமான தளத்தில் எந்த அளவுக்குள் மட்டும் விசாரணை நடத்த முடியும் என்பதை பாதுகாப்பு படை வரையறுத்து வைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் படையினருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆய்வு செய்ய அனுமதி கிடையாது.

- தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிகளில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். வேறு எந்த பகுதிக்குள்ளும் அனுமதி கிடையாது.
- தாக்குதலுக்கு முன்பாக ஒருநாள் இரவு தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை பார்க்க அனுமதியுண்டு.
- இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைந்த பகுதியை ஆய்வு செய்ய அநுமதிக்கப்படும்.
- இகாகர் சிங் என்ற டாக்சி டிரைவரை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து டாக்சியை பறித்து சென்ற இடத்தில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படும்.
- குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கடத்தப்பட்ட பகுதி காண்பிக்கப்படும்.
- தேசிய பாதுகாப்பு படை, இந்திய விமானப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் பாகிஸ்தான் விசாரணை குழு விசாரிக்க இந்தியா அனுமதிக்காது.
- பஞ்சாப் எஸ்.பியிடமும், அவரின் நண்பர் ராஜேஷ் வர்மா மற்றும் சமையல்காரர், மதன் கோபால் ஆகியோரிடமும் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 17 சாட்சியங்களிடம் விசாரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications