Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛சாதிச்சிட்டடா தம்பி’’.. அமைச்சரானதும் அண்ணன் காலில் விழுந்த பவன் கல்யாண்.. கண்கலங்கிய சிரஞ்சீவி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அதேபோல் ஜனசேனா கட்சியின் எம்எல்ஏவான நடிகர் பவன் கல்யாண் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அதன்பிறகு அவர் நேரடியாக தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது சிரஞ்சீவி கண்கலங்கி தட்டிக்கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கூட்டணியும் எழுச்சி பெறவில்லை.

pawan kalyan chiranjeevi chandrababu naidu oath ceremony telugu desam andhra pradesh

அதாவது மொத்தமுள்ள 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றியது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களில் வென்று அசத்தியது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதையடுத்து விஜயவாடாவில் நடந்த விழாவில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா, நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்பட பலர் பங்கேற்றனர். அதன்பிறகு அமைச்சர்கள் பதவியேற்றனர்.

துணை முதல்வர் பதவி நடிகரும், ஜனசேனா கட்சியின் எம்எல்ஏவுமான பவன் கல்யாணுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அதன்பிறகு அவர் அமைச்சராக பதவியேற்றதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். மேடையில் இருந்த பிரதமர் மோடி, ஆளுநர் அப்துல், முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு மரியாதை செய்தார்.

அப்போது மேடையில் நின்ற அண்ணன் சிரஞ்சீவியை பார்த்ததும், நடிகர் பவன் கல்யாண் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இந்த சமயத்தில் சிரஞ்சீவி கண்கலங்கி பவன் கல்யாணின் தோளில் தட்டிக்கொடுத்தார். ஆந்திராவை பொறுத்தமட்டில் சிரஞ்சீவி பிரசா ராஜ்யம் கட்சியை தொடங்கினார். ஆனால் அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் அவர் தனது கட்சியை காங்கிசுடன் இணைத்து கொண்டு மத்திய அமைச்சரானார். 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது சிரஞ்சீவி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

pawan kalyan chiranjeevi chandrababu naidu oath ceremony telugu desam andhra pradesh

இந்த சமயத்தில் தான் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் போராடிய பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 21 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2 லோக்சபா தொகுதிகளிலும் அவரது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் அரசியலில் சாதித்துவிட்டாய் தம்பி என்பது போல் பவன் கல்யாணை, சிரஞ்சீவி பாராட்டினார்.

முன்னதாக, விழா மேடைக்கு பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் அழைத்து வந்தனர். இந்த சமயத்தில் தம்பி பவன் கல்யாணுடன், சிரஞ்சீவியும் இணைந்தார். இதையடுத்து பிரதமர் மோடி ஒருபுறம் சிரஞ்சீவி, இன்னொரு புறம் பவன் கல்யான் நிற்க இருவரின் கைகளை சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தி காண்பித்தார். அதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வேளையில் பாசத்தோடு சிரஞ்சீவி, பவன் கல்யாணின் கன்னத்தை தட்டிக்கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+