"பே கமிஷன்" போதும்.. வருடா வருடம் சம்பளத்தை உயர்த்துங்கள் - ஊதியக் கமிஷன் தலைவர் ஏ.கே.மாத்தூர்
டெல்லி: ஊதியக் கமிஷன் அமைக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக வருடா வருடம் ஊதிய உயர்வை மேற்கொண்டு வரலாம் என்று 7வது ஊதியக் கமிஷன் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்துள்ளார்.
10 வருடத்திற்கு ஒருமுறை தற்போது ஊதியக் கமிஷன் அமைக்கப்படுகிறது. அது அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. தற்போது 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. இதன் தலைவராக இருந்தவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர்.
இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஊதியக் கமிஷன் அமைக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக வருடா வருடம் ஊதிய உயர்வை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மாத்தூர் அளித்துள்ள பேட்டியிலிருந்து..

வருடாந்திர ஊதிய உயர்வு
10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதை விட வருடா வருடம் ஊதியத்தை உயர்த்தும் நடைமுறையை மத்திய அரசு யோசிக்க வேண்டும். நுகர்வு பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊதிய உயர்வை மேற்கொள்ளலாம்.

தேவையற்ற சுமை
ஊதியக் கமிஷனை அமைத்து, அதை செயல்படுத்தும் நடைமுறை தேவையற்ற நிதிச் சுமையைத்தான் மத்திய அரசுக்கு அளிக்கும். எனவே அதை கைவிட வேண்டும்.

மாநிலங்களுக்கும் கஷ்டம்தான்
மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்கும் கூட இது கடினமானதுதான். எனவே எல்லோருக்கும் பாதிப்பைத் தரும் இந்த நடைமுறையை விட்டு விடலாம்.

தனியார் நிறுவனம் போல
தனியார் நிறுவனங்களில் உள்ளது போல அரசு ஊழியர்களுக்கும் வருடாந்திர ஊதிய உயர்வை அளிக்கலாம். அது சரியாகவும் இருக்கும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார் மாத்தூர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications