For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயில் செக்ஸ் வச்சிக்காதுன்னு பகவத் புராணமே சொல்லியிருக்கு.. அப்புறம் என்ன.. மயில் நீதிபதி உளறல்

ஆண் மயில் பாலுறவு வைத்துக் கொள்ளாது என்று பகவத் புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் ஆதாரம் தேவையில்லை என்று ஓய்வு பெற்ற ராஜஸ்தான் நீதிபதி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஆண் மயிலும் பெண் மயிலும் எப்படி பாலுறுவு கொள்கிறது என்று சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஓய்வு பெற்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா.

ஆண் மயில் ஒருபோதும் பெண் மயிலுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று அறிவியலுக்கு புறம்பாக பேசி இருக்கிறார்.

பெண் மயிலுடன் உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதாலேயே அவை புனிதமானவை என்று பிதற்றியுள்ளார். அதனால்தான் கிருஷ்ணன் என்ற கடவுள் தனது தலையில் மயிலிறகை சூடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

தேசிய விலங்கு

தேசிய விலங்கு

இதேபோல் பசுவுக்கும் பல தெய்வீக குணங்கள் இருக்கின்றன. அதனால் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் மகேஷ் சந்திர சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதாரம் தேவையில்லை

ஆதாரம் தேவையில்லை

இந்நிலையில், இது அறிவியலுக்கு புறம்பானது என்ற கேள்வியை செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பினார்கள். அதற்கு அவர், மயில் பாலுறவு கொள்ளாது என்று பகவத் புராணத்திலேயே இருக்கிறது. அதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் தேவையில்லை என்று பதில் அளித்துள்ளார்.

அரசியல் ஆசை

அரசியல் ஆசை

மயில் பற்றியும் பசு பற்றியும் தான் பேசியது அனைத்தையும் அரசியலாக்க வேண்டாம், அரசியலில் ஈடுபடும் எண்ணமும் கிடையாது என்று மகேஷ் சந்திர சர்மா கூறியுள்ளார்.

எதிர்க்காலத் திட்டம்

எதிர்க்காலத் திட்டம்

கடவுள் வழிபாட்டில் தீவிர கவனம் செலுத்த உள்ளேன்; இதுவே என் எதிர்கால திட்டம் என்று கூறி தற்போதைக்கு எஸ்கேப் ஆகி இருக்கிறார் மகேஷ் சந்திர சர்மா. இவர் இப்படி பேசி வருவதால் ராஜஸ்தான் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற உடன் மத்தியில் ஆளும் பாஜக அரசில் தேசிய அளவில் பதவி பெற இப்படி பேசிகிறார் என்றும் செய்திகள் உலா வருகின்றன.

English summary
Former HC judge Mahesh Chandra Sharma said peacocks were mentioned in Bhagavad Purana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X