யாருசாமி நீ.. அழுதுகிட்டே தன்னை தானே செருப்பால அடிச்சுக்கிட்ட கவுன்சிலர்.. மக்களின் ரியாக்சன் வேறலெவல்
திருப்பதி: மக்கள் என்னை ரொம்பவும் நம்புனாங்க.. ஆனால் நான் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று கூறி நகராட்சி கூட்டத்தில் மற்ற கவுன்சிலர்கள் முன்பு கவுன்சிலர் ஒருவர் ஆவேசத்துடன் தன்னை தானே செருப்பால் அடித்ததை பார்த்த நெட்டிசன்கள்.. சத்தியமாக இது தமிழ்நாடாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்
நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த கூட்டங்களை எப்போதாவது நீங்கள் பார்த்தது உண்டா? அங்கு அவ்வப்போது ஆளும் கட்சி கவுன்சிலர்களும், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் மோதுவதை பார்த்தால் நீங்கள் அரண்டு போவீர்கள்.

கடுமையான வாக்குவாதங்கள் கூட சில சமயங்களில் நடக்கும். ஆவேசத்தின் உச்சத்தில் அவர்கள் வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். மறுநாள் அவை பெரும் விவாதப்பொருளாக மாறும். அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் நடந்து தமிழ்நாட்டில் இல்லை. ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் அனாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முலபார்தி ராமராஜூ என்பவர் கவுன்சிலராக உள்ளார். இவர் கவுன்சிலர் தேர்தலின் போது குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால், தரமான சாலைகள் என பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

ராமராஜூ கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான் மக்கள் அவரை கவுன்சிலராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அவர் கேட்டபடி ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகம் அந்த தொகையை ஒதுக்கவில்லை என்ற கூறப்படுகிறது.
இதனால் ராமராஜூவால் 31 மாதங்கள் ஆகியும் அளித்த வாக்குதியை நிறைவேற்ற முடியவில்லை.. இதனால் தன் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தன்னால் நல்லது செய்ய முடியவில்லை என்று கூறி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் வேதனையுடன் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிவயப்ட்டவராக தான் அணிந்திருந்த செருப்பால் தன்னை தானே அடித்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து அழுது கொண்டே வெளியேறி உள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . மேலும் கவுன்சிலர் செருப்பால் அடித்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
Andhra Pradesh councillor slaps his own face with slippers for he failed to fulfill his promises.
— Naren Mukherjee (@NMukherjee6) August 1, 2023
People complained he hit very lightly. 😂 👇 pic.twitter.com/RgbNNwIhgI
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இப்படியுமான கவுன்சிலர் இருப்பாரு..நிச்சயமாக இது தமிழ்நாடாக இருக்க வாய்ப்பே இல்லை.மனசாட்சி உள்ள கவுன்சிலர் என்று கூறி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் இவரிடம் இருந்து பாடத்தை கற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதேநேரம் தன் மீது சிம்பதி வர வேண்டும் என்பதற்காக கவுன்சிலர் இப்படி செய்வதாகவும் ஆந்திராவில் உள்ள ஆளும் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.எது எப்படியோ ஆந்திராவின் கவுன்சிலர் ராமராஜூ ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications