அடேங்கப்பா! ம.பியை அடித்து தூக்கும் காங்கிரஸ்.. இவ்வளவு சீட்டா? People's pulse Exit Polls ரிசல்ட்!
போபால்: People's pulse எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள், மத்திய பிரதேசத்தில் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டுவது யார் என்பது டிசம்பர் 3ஆம் தேதி தெரிந்துவிடும்.

இந்நிலையில், 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவும் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், மத்திய பிரதேசத்தில் செம போட்டி நிலவினாலும், காங்கிரஸ் கட்சி சற்று முந்தி இருப்பதாகவே எக்சிட் போல் கணிப்புகள் சொல்கின்றன.
இந்நிலையில், People's pulse எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள், மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி தட்டித் தூக்கும் எனக் கணித்துள்ளது.
People's pulse எக்சிட் போல் முடிவுகள்:
காங்கிரஸ் 117-139
பாஜக 91-113
மற்றவை 0-8
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெறுவதில் இழுபறி நிகழலாம் என ஜன் கி பாத், டைம்ஸ் நவ்- இடிஜி, டிவி9 போல்ஸ்ட்ராட் ஆகிய கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், People's pulse கணிப்பு, ம.பியில், காங்கிரஸ் ஆட்சிதான் என அடித்துச் சொல்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம், மேஜிக் நம்பரான 116-ஐ கடந்துவிடும் என்கிறது இந்தக் கணிப்பு.
கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ம.பி முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு சென்றதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில், இந்த முறையும் அப்படி மெஜாரிட்டி கிடைக்காத சூழல் ஏற்படுமோ என்பது காங்கிரஸ் கட்சியினரின் கவலையாக உள்ளது. இந்நிலையில், பீப்புள்ஸ் பல்ஸ் எக்சிட் போல் முடிவுகள், காங்கிரஸ் சுயர் ஷாட் அடிக்கும் எனத் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications