ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போடும் "பீட்டா" அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் !
டெல்லி: ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசோ, மத்திய அரசோ கொண்டு வந்தால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை பிராணிகள் நல உரிமைகள் அமைப்பு (பீட்டா) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காளைகளை ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க அனுமதிக்கும் மத்திய அரசின் ஜனவரி 7-ஆம் தேதியிட்ட அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. மேலும், இந்தத் தடையை நீக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா,குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியது.
அதில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. காளைகளை பாதுகாக்க வேண்டுமானால், அத்தகைய அவசர சட்டம் எதையும் தாங்கள் பிறப்பிக்க வேண்டாம்.
மேலும், இதுதொடர்பான அவசர சட்டம் பிறப்பிப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது மட்டுமின்றி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம் என்று பீட்டா கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மிருக வதைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து "பீட்டா' முன்னெடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications