தமிழகத்தில் செப்.16-ல் பெட்ரோல் பங்குகள் மூடப்படும்- பந்துக்கு ஆதரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வரும் 16-ந் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவாக பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக வரும் 16-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். ஆகையால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications