ஏற்றுவது ரூபாயில்.. குறைப்பது பைசாவில்.. பெட்ரோல் டீசல் விலையை குறைத்தன எண்ணெய் நிறுவனங்கள்...
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்திருப்பதாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. டெல்லி நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசலின் விலையில் 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த (மே) 16 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.71 ம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.66.93 காசுகளில் இருந்து ரூ.66.62 காசுகளாகவும், டீசல் விலை ரூ.50.93 காசுகளில் இருந்து ரூ.50.22 காசுகளாகவும் குறைக்கப்படுகிறது.
சென்னையில் இனி பெட்ரோல் விலை லிட்டருக்கு வரிகளைப் பொருத்து 28 காசுகள் குறைந்து ரூ.69.84 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 77 பைசா குறைந்து ரூ.53.52 க்கும் விற்பனையாகும்.
கடந்த முறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பின் மாற்றம், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றைப் பொறுத்து எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மறுசீரமைக்கப்படும் என்று ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications