ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3வது முறையாக... பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.82 குறைப்பு
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.92 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதமிருமுறை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அந்நியச் செலாவணியில் மாற்றங்கள் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலைக்குறைப்பு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

பெட்ரோல் விலை...
இதன்படி, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டது. இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.51 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு வரியுடன் சேர்த்து ரூ.1.92 குறைக்கப்பட்டு ரூ.71.55 ஆகவும் இருக்கும். மற்ற நகரங்களிலும் வாட் வரிக்கு ஏற்ப விலை மாறுபடும்.

3வது விலைக் குறைப்பு...
முன்னதாக இம்மாதம் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.90 பைசாவும், அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி ரூ.1.89 முதல் ரூ.2.38 வரை குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி புதிய விலை அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதற்கு 2 நாள் முன்னதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

விலை உயர்வு...
இது ஒருபுறமிருக்க கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, டீசல் விலை ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பு உற்பத்தி செலவுக்கும் சில்லறை விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் குறையும் வரையில் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

டீசல் விலை...
இதன்படி டீசல் விலை நேற்று லிட்டருக்கு 50 பைசா உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாட் வரிகளுடன் சேர்த்து டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா அதிகரித்து ரூ.58.97 ஆகவும், சென்னையில் லிட்டருக்கு 0.62 பைசா அதிகரித்து ரூ.62.92 ஆகவும் இருக்கும்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications