பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2, டீசல் 50 காசுகள் விலை குறைப்பு.. இன்று நள்ளிரவு முதல்!
டெல்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது.
நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை இன்றைய வர்த்தக நேர முடிவுப்படி 43.96 டாலராக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதையடுத்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
முக்கிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...
பெட்ரோல் விலை
டெல்லி -பழைய விலை 63.20- புதிய விலை -61.20 - குறைவு ரூ.2
கொல்கொத்தா- பழைய விலை 68.10- புதிய விலை -66.50 - குறைவு ரூ.1.60
மும்பை- பழைய விலை 68.24- புதிய விலை -66.23 - குறைவு ரூ.2.01
சென்னை -பழைய விலை 63.49- புதிய விலை -61.46 - குறைவு ரூ.2.03
டீசல் விலை
டெல்லி - பழைய விலை ரூ.44.95- புதிய விலை -44.45- குறைவு 0.50
கொல்கொத்தா- பழைய விலை ரூ.48.66- புதிய விலை -48.23- குறைவு 0.43
மும்பை- பழைய விலை ரூ.50.04- புதிய விலை -49.51- குறைவு 0.53
சென்னை- பழைய விலை ரூ.46.08- புதிய விலை -45.56- குறைவு 0.52
இந்த விலைக் குறைப்பு இன்று (31-08-2015) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications