பெட்ரோல் விலை குறைவு இன்று நள்ளிரவு அமலுக்கு வரும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டுவிட்டர் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "பெட்ரோல் விலை வியாழக்கிழமை நள்ளிரவு லிட்டருக்கு ரூபாய் 1.89 முதல் ரூபாய் 2.38 வரை குறைக்கப்பட இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்புப்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.18 குறைந்து ரூபாய் 70.33க்கு விற்கப்படும்.
கொல்கத்தாவில் ரூபாய் 2.27 குறைந்து, ரூபாய் 78.03க்கும், மும்பையில் ரூபாய் 2.28 குறைந்து ரூபாய் 78.32க்கும், சென்னையில் ரூபாய் 2.31 குறைந்து ரூபாய் 73.47க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications