பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
மும்பையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்துடன் எண்ணெய் நிறுவனஙகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை: பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பங்க் உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைதொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை 2 நாட்களுக்கு நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தி வந்தனர் பங்க் உரிமையாளர்கள்.

இந்த நிலையில் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் எண்ணெய் நிறுவனங்களுடன் மும்பையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெட்ரோல் லிட்டருக்கு 13.8 காசுகளும், டீசல் லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டிற்கு இருமுறை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கவும் பேச்சுவார்த்தையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஒரு வார காலத்திற்குள்
முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.20 காசுகளும் டீசல் லிட்டருக்கு 77 பைசா கமிஷன் தொகை உயர்த்த கோரி பங்க் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications