ரெய்னா திருமணத்திற்கு 'தல' டோணி வந்தாக, சீனி மாமா வந்தாக இன்னும்...
டெல்லி: டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் சக வீரர்களான டோணி, ஷிகர் தவான், இஷாந்த் சர்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. ரெய்னா தங்க நிற ஷெர்வானியில் அம்சமாக இருந்தார். பிரியங்கா சிவப்பு நிற லெஹங்காவில் மிகவும் அழகாக இருந்தார்.
திருமண விழாவுக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலர் வந்திருந்தனர்.

டோணி
கேப்டன் டோணி தனது மனைவி சாக்ஷியுடன் நண்பன் ரெய்னாவின் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமண விழாவில் அவர் சக வீரர் இர்பான் பதான், பாலிவுட் நடிகர் அனுபம் கேருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

பிராவோ
ஐபிஎல் போட்டிகளில் டோணி, ரெய்னாவுடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவும் திருமண விழாவுக்கு வந்து தம்பதிகளை வாழ்த்தினார்.

சீனிவாசன்
ஐசிசி தலைவர் சீனிவாசன் திருமண விழாவில் கலந்து கொண்டு ரெய்னா, பிரியங்காவை வாழ்த்தினார்.

மோஹித் சர்மா
ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் குத்துச் சண்டை வீரர் சுஷில் குமார், கிரிக்கெட் வீரர் மோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ேஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாக்ஷி
குழந்தை பிறந்த பிறகு சாக்ஷி முதல்முறையாக தனது கணவருடன் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவரும், டோணியும் நடிகர் அனுபம் கேருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

தவான்
கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, வீரேந்தர் ஷேவாக் ஆகியோரும் ரெய்னாவின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications