பதவி தந்த அம்மாவுக்கு முத்தத்தை பரிசளித்த ராகுல் காந்தி... என்னா பாசம் மொமண்ட்!

காங்கிரஸ் தலைவர் பதவி தந்த தாய் சோனியாகாந்திக்கு ராகுல்காந்தி விழா மேடையில் முத்தத்தை பரிசாக தந்த காட்சி இன்றைய நாளின் சிறந்த புகைப்படமாக அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பதவி தந்த அம்மாவுக்கு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி-வீடியோ

    டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தனக்கு பிறகு மகனுக்கு தந்த சோனியாகாந்திக்கு தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முத்ததை பரிசாக தந்துள்ளார் ராகுல்காந்தி. ராகுல் காந்தி அன்போடு தாய் சோனியாகாந்திக்கு முத்தமிடும் இந்த புகைப்படம் இன்றைய நாளின் சிறந்த புகைப்படமாக அமைந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர் ராகுல்காந்தி, இந்த வார்த்தைக்கான முற்றுப்புள்ளி இன்று வைக்கப்பட்டுள்ளது. கணவர் ராஜீவ்காந்தி மறைவிற்குப் பிறகு 19 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறப்பாக வழிநடத்தி வந்தார் சோனியா காந்தி. தன்னுடைய தலைவர் பொறுப்பு காலத்தில் இரண்டு முறை மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியை கொண்டு வந்தவர்.

    சோனியாகாந்தியின் அருகில் இருந்து அவரின் அரசியல் நடவடிக்கைகளை பார்த்து வந்தவர் அவருடைய ஒரே மகனான ராகுல்காந்தி. படிப்பு, வேலை என்று வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவர் 2003ம் ஆண்டு முதல் தாயுடன் இணைந்து அரசியல் பாடம் கற்றார்.

    ராகுலின் அரசியல் வளர்ச்சி

    ராகுலின் அரசியல் வளர்ச்சி

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், 2014ம் ஆண்டில் காங்கிரஸ் தணைத் தலைவர் எஎன்று சோனியாகாந்தி ராகுல்காதியை படிப்படியான வளர்ச்சியை கட்சியில் அடைய வைத்தார். இதற்கிடையில் ராகுல்காந்தியும் தன் மீதான செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான செயல்பாடுகளில் இறங்கினார். நாட்டின் வளர்ச்சி இளைஞர் கையில் இருப்பது போல காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி இளம் தலைவரான ராகுல்காந்தி பொறுப்பேற்றாலே நடக்கும் என்று கட்சியினர் மத்தியில் நம்பிக்கையை விதைத்தார்.

    சோனியாவிற்குப் பிறகு ராகுல்

    சோனியாவிற்குப் பிறகு ராகுல்

    சோனியாகாந்திக்கு அவ்வபோது உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் அடுத்த தலைவரை கட்சிக்காக தீவிரமாக செயல்படும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்தே ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உட்கட்சி தேர்தல் முறைப்படியே அவர் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உச்சி முகர்ந்து முத்தமிட்ட ராகுல்

    உச்சி முகர்ந்து முத்தமிட்ட ராகுல்

    டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் தாய் சோனியாகாந்திக்கு அருகில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தார் ராகுல்காந்தி. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற சந்தோஷத்தில் தாயை உச்சி முகர்ந்து முத்தமிடடார் ராகுல்காந்தி.

    ராகுலுக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் இருக்கிறதா?

    ராகுலுக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் இருக்கிறதா?

    குடும்ப அரசியல் என்பது மாநில கட்சியாக இருந்தாலும், தேசிய கட்சியாக இருந்தாலும் ஒன்று தான் என்பது ராகுல்காந்தி தலைவராகி இருப்பதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனினும் இத்தாலியைச் சேர்ந்தவர் என்பதால் பிரதமராகும் வாய்ப்பு சோனியாகாந்திக்கு கிடைக்காத நிலையில் ராகுல்காந்திக்காவது பிரதமராகும் எதிர்காலம் இருக்கிறது என்பதை எதிர்காலம் தான் முடிவு செய்யும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+