ஒரு நாள் ஆசிரியராக மாறும் பினராயி விஜயன்... ஆசிரியர் தினத்தில் பள்ளி செல்ல திட்டம்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் படித்த பள்ளியில் ஆசிரியர் தினமான செப்.5-ந் தேதி வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளார். இதேபோல மற்ற எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் அன்று வகுப்பு எடுத்து மாணவர்களுடன் சகஜமாக பழக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் முதல்வரைகளை விட கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகள் புதுமையாக விளங்குகிறது. ஏனெனில், பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு இதுவரை எந்த கம்யூனிஸ்ட் முதல்வரும் செல்லாத நிலையில், முதல் முறையாக பினராயி விஜயன் சபரிமலை சென்று அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.

மேலும், கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருந்த பல்வேறு தடைகளை அகற்றிய பினராயி விஜயன், பொதுமக்கள் சுலபமாக முதல்வரை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி பினராயி விஜயன் ஒரு நாள் ஆசிரியராக மாறுகிறார். அன்று அவர் தனது சொந்த தொகுதியான பினராய்க்கு சென்று அங்கு தான் படித்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதேபோல, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு அன்று சென்று ஒரு நாள் வகுப்பு எடுத்து, மாணவர்களுடன் சகஜமாக பழகி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
-
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications